சட்டத்தரணி தம்பதியர் கொலைச் சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் கைது

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அம்பலங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவல்களின் படி, அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு (CCTV) காட்சிகளில் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக் கொண்டிருக்கும் நபர் இவரே என நம்பப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு நபர்களும், அவர்களை தங்கியிருந்த விடுதிக்கு கொண்டு சென்ற வாகன சாரதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், குற்றத்திற்கு முன்னர் துப்பாக்கிதாரிகளை தங்கியிருந்த விடுதிக்கு கொண்டு சென்ற வாகனத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் உரிமையாளர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவத்தில் ரிவால்வர் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், ரூக்ககஹவிலா, மீவல, பன்சல வீதியைச் சேர்ந்த ரொபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்ய விரிவான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி, தலங்கம, அக்குரேகொடா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், சட்டத்தரணி புத்திக்க மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டன.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிதாரிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரர்கள் பெப்ரவரி 16 ஆம் திகதி கொட்டாவ பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் “டிலா” என அழைக்கப்படும் மற்றொரு சந்தேகநபர் பொல்கசோவிற்ற பகுதியில் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த இரு சகோதரர்களும் “டிலா” என அழைக்கப்படும் நபரின் உத்தரவின் பேரிலேயே ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு