கியூபெக் நகரத்தில் ஒப்பந்த அடிப்படையில் சடலங்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், சடலம் வைக்கப்பட்ட பையை அவமரியாதையுடன் கையாளும் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, கியூபெக்கின் கொரோனர் அலுவலகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் பொதுமக்களிடம் கடும் கண்டனத்தைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, கொரோனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு மன்னிப்பும் ஆறுதலும் தெரிவித்துள்ளது.
இந்தக் காணொளியானது கியூபெக் நகர வானொலித் தொகுப்பாளர் ஸ்டீஃபன் டியூபோன்ட் (Stéphane Dupont) என்பவரால் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.
ஒலியற்ற இந்தக் காணொளியில், ஒரு நபர் இரண்டாவது மாடி பால்கனியில் (balcony) இருக்கும் வெள்ளை நிற சடலப் பையின் ஒரு முனையைப் பிடித்து, பால்கனியின் நீளம் முழுவதும் தரையில் இழுத்துச் செல்வது தெளிவாகத் தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.