கொழும்பு BMICH இல் ஊடகப் பட்டமளிப்பு விழா

இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 22ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் தலைவரும், ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் ஜலால்டீன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக பிபிசி செய்தி சேவையின் முன்னாள் செய்தியாளரும் நியூஸ் வயர் செய்தி சேவையின் ஸ்தாகருமான அஸாம் அமீன் மற்றும் ஏ.ஒ.ஜி கெம்பஸின் இயக்குனர் ஷாகிர் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக, ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் வலையமைப்பு பொருளியலாளருமான ரஸா மல்ஹர்டீன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வசந்தம் டிவி செய்தி வாசிப்பாளருமான ஜனரஞ்சன் யோகராஜ், வசந்தம் எப்.எம், டிவி செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, மூத்த ஒளி, ஒலிபரப்பாளர் யு.எல்.எம் யாகூப், மூத்த பத்திரிக்கையாளர் அமீர் ஹூசைன், வசந்தம் டி.வி செய்தி வாசிப்பாளர் சந்திரிக்கா ஆர்முகம், தினகரன் பத்திரிகையாளரும், பாதுகாப்பு அமைச்சின் தமிழ் ஊடகப் பொறுப்பாளருமான சாதிக் சிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது வெகுஜன ஊடக கற்கை நெறி, புகைப்படக்கலை மற்றும் வீடியோகலை கற்கை நெறி ஆகியவற்றை நிறைவு செய்த சுமார் 200 மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் ஊடக ஒழுக்கங்களுடன் கூடிய ஊடகவியலின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியானது கடந்த 10 வருடங்களாக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மேலும், பிரயோக ரீதியில் ஊடக கற்கை நெறியை மிகச் சிறப்பாக வழங்கும் அரச டிவெக் (TVEC) அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடக கல்லூரியாகவும் திகழ்கின்றது, இந்த வெகுஜன ஊடக கற்கை நெறியின் 21ஆவது குழுவும் புகைப்படக்கலை மற்றும் வீடியோகலை கற்கை நெறியின் 13 ஆவது குழுவும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

By C.G.Prashanthan

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு