புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி என்ற சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணைகளின் போது,குறித்த சார்ஜன்ட் சந்தேக நபருடன் பிஸ்கட்டை இரண்டாக உடைத்து கை சைகைகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.