கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது?

ஹட்டன் – கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது என தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நேற்று(14.01.2026) அதே இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், லொப்கில் பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 பேருக்கு இருபத்தையாயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியான 13 பேருக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவி யாகுலமேரி கருத்து தெரிவிக்கையில்,

இந்த வட்டாரத்தில் தேர்தல் வெற்றி பெற்றவர் என்ற வகையில் இந்த கருத்தை தெரிவிக்கிறேன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் புஸ்பா விஸ்வநாதன் அவர்கள் மக்களை திரட்டி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அது ஒரு பொய்யான போராட்டம், இங்குள்ள 24 பேருக்கு பணம் கிடைத்துள்ளது மிகுதியாக உள்ளவர்களுக்கு நாளை அல்லது நாளை மறுதினம் கிடைக்கும்.

லொப்கில் இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் அவர் கிடைக்காத மக்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.

இதனை கேள்வியுற்றே அவர் இந்த போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளார். அது மாத்திரமன்றி இன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எந்த எதிர் கட்சி உறுப்பினரும் சென்று சிரமதான பணியிலோ அல்லது மக்களுக்கு உதவவோ இல்லை.

ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அதுவும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துவிட்டு அரசியல் இலாபம் தேடி வருகிறார்கள்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவ்வாறான இழிவான அரசியல் செய்யும் கட்சி அல்ல, அது அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலே செயப்பட்டு வருகிறது என அதனை இன்று மக்கள் உணர்ந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு மேல் அவர்களின் கட்சியின் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். எந்தவொரு மழையிலும் பாதிக்கப்படும் பிரதேசம் தான் லொப்கில் பிரதேசம் அப்போது அவர்கள் கடந்த அரசாங்கங்கள் இருக்கும் போது ஏன் இந்த மக்களுக்காக வேறு இடத்தில் வீடு கட்டி தரும்படி குரல் கொடுக்கவில்லை.

காணிகளை பெற்றுக்கொடுக்க சொல்லி போராட்டம் செய்யவில்லை, தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது. அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் கட்டாயம் பெற்றுக்கொடுப்பதே அவர்களின் நோக்கம்.

அத்துடன், தலவாக்கலை பிரதேச செயலகம் என்பது சுமார் லட்சக்கணக்கில் சன நெரிசலை கொண்ட ஒரு பிரதேச செயலகம். எனவே, சேவைகளை முன்னெடுக்கும் போது சில கால தாமதங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய