கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ள நிலையில், கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகிய எரிபொருள் முனையங்கள் நேற்று திங்கட்கிழமை ( 02) விடுமுறை தினத்திலும் முழுநேர விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நிலவும் அதிக கேள்வியைச் சமாளிக்கும் வகையில், கொலன்னாவை முனையத்தில் மேலதிக ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9:44 மணி வரையான காலப்பகுதிக்குள் மட்டும் சுமார் 5.2 மில்லியன் லிட்டர் எரிபொருள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதில் 2,325,349 லிட்டர் டீசலும், 2,904,000 லிட்டர் பெட்ரோலும் அடங்குவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளைக் கட்டுப்படுத்தவும், கறுப்புச் சந்தையில் எரிபொருள் விற்கப்படுவதைத் தடுக்கவும் கேன்கள் மற்றும் போத்தல்களில் எரிபொருள் வழங்குவதற்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள அதிகாரிகள், நாட்டில் பெட்ரோல் 37 நாட்களுக்கும், டீசல் 35 நாட்களுக்கும், சூப்பர் டீசல் 72 நாட்களுக்கும் மற்றும் விமான எரிபொருள் 47 நாட்களுக்கும் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் இறக்குமதி ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதால், சர்வதேச அரசியல் சூழலினால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் எனவும், அமைதியைப் பேணுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரும் இராணுவத்தினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய