அஹங்கம – தித்தகல்ல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றபோது, தாக்குதலில் காயமடைந்த பெண்ணும் மூதாட்டியும் கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அஹங்கம – தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் கூரிய ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அஹங்கம பொலிஸாரால் நடத்தப்பட்டு வருகின்றது.