ஹொங்கொங், மொங் கொக் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த வருடத்திற்கான ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கை தனது இரண்டு குழுநிலைப் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்விகளை அடுத்து குவலைக்கான சுற்றில் இலங்கை விளையாடவுள்ளது.
டி குழுவில் இடம்பெற்ற இலங்கை ஆரம்ப நாளான இன்றைய தினம் தனது முதலாவது போட்டியில் வரவேற்பு நாடான ஹொங்கொங்கிடம் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.
இலங்கை 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது.
தனுக்க தாபரே 26 ஓட்டங்களையும் நிமேஷ் விமுக்தி ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் தனஞ்சய லக்ஷான் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நர்சுல்லா ரானா 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது..
அணித் தலைவர் யசிம் முர்ட்டஸா 8 பந்துகளில் 26 ஓட்டங்களுடனும் அய்ஸாஸ் கான் 10 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆட்டநாயகன்: அய்ஸாஸ் கான்
பங்களாதேஷிடமும் இலங்கை தோல்வி
பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது.