கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், 22வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(20.1.2026) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
22ஆவது காலாட் படைப் பிரிவின் 34ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகர, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள அந்தப் படைப் பிரிவு தலைமையகத்தில் தமது பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.