கிழக்கில் 230 கிராம் ஐஸ்: இளம் தம்பதி கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 230 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 24,23 வயதுடைய இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான பொலிஸார்  திங்கட்கிழமை (06) மாலை கைது செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகை  ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்று    வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர்  சம்பவ தினமான திங்கட்கிழமை (06) மாலை 4.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கல்குடாவில் இருந்து ஐஸ் போதை பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்துக் கொண்டு சென்ற போது அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 230 கிராம் ஐஸ் போதை பொருளை கைப்பற்றினர். அதனையடுத்து அவர்களையும் கைது செய்தது முச்சக்கரவண்டியும் கைப்பற்றினர்.

மொறக்கொட்டான்சேனையில் இருக்கு ஒரு பிரதான போதைப் பொருள் வியாபாரி கொழும்பில் நாய் குட்டி ஒன்று  வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்து கொண்டு வந்து தருமாறு குறித்த தம்பதிகளிடம் கூறியுள்ளார்.  அதற்கு கூலியாக 30 ஆயிரம்  ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு புகையிரதத்தில் சென்று அங்கு  புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள் பஸ் வண்டி ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்

இதையடுத்து சம்பவ தினமான  திங்கட்கிழமை (06) மொற கொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கி கொண்டு வந்த நாய்க்குட்டி மற்றும் பையை  கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் இதில் போதைப் பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதில், கைது செய்யப்பட்ட இளம் தம்பதியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து