கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருவதால் இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது.
அத்தோடு, மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான் பாய்கின்றது.
கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் பனை மரம் மின்சார வயரில் வீழ்ந்து காணப்படுகின்றதால் அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, வட்டுவாகல் பாலம் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதனால் பாலத்தினூடாக பயணம் செய்பவர்கள் சற்று அவதானத்துடன் பயணம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.