‘கிரிஷ் நிறுவன ஒப்பந்தம்’ தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இன்று வியாழக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகோடா முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (18) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக முந்தைய சந்தர்ப்பத்தில் கோரப்பட்ட பல ஆவணங்களை அரசு தரப்பு பிரதிவாதிக்கு வழங்கியது.
கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்தார்.
இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய ரூ.70 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் ரூ.70 மில்லியன் நிதியை வழங்கியதாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது.
நாமலுக்கு எதிரான கிரிஷ் ஒப்பந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.