கனடாவின் மேற்கு கியூபெக் மாகாணத்தின் மலைப்பகுதியில் கடுமையாக காயமடைந்த சிறுமி உயிரிழந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
CHEO மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், வெக்ஃபீல்டு (Wakefield), குவெபெக் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்கீ லிப்ட் இயந்திரத்தில் உடை சிக்கி கடுமையாக காயமடைந்த 13 வயது சிறுமி உயிரிழந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 11 ஆம் திகதி அன்று வெக்ஃபீல்டு அருகிலுள்ள Centre Vorlage மையத்திற்கு வகுப்பு சுற்றுப்பயணமாகச் சென்றிருந்த சிறுமிஇ மலை உச்சியில் உள்ள சேர்-லிப்டிலிருந்து இறங்கத் தயாராகியிருந்தபோதுஇ அவரது உடைகள் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டன. அங்கிருந்தவர்கள் சிறுமியைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்யார்கள். பெரும் போராட்டத்தின் பின் இயந்திரத்தி;ல் சிக்குண்ட சிறுமியை மீட்டபோது அவர் மயக்கமுற்று இருந்தார் என தெரிவிக்கப்பட்டது.
உரிய முதலுதவிகள் வழங்கப்பட்டு சிறுமி மருத்துவமனையில் ஒட்டாவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். விபத்து பற்றியும் மருத்துவ மனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.
சிறுமியின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டடுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் ஸ்கீ லிப்ட்களை ஆய்வு செய்ய பொறுப்பான Régie du bâtiment du Québec (RBQ) அமைப்பும்,உயிரிழந்த சிறுமியின் விபத்து இயந்திர கோளாறினால் தான் ஏற்பட்டதா என ஆய்வு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.