தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 35 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சியோல் தலைநகரில் இருந்து தெற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேஜியோனில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க தேசிய தீயணைப்பு திணைக்களம் நாடளாவிய ரீதியில் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த சுமார் 240 தீயணைப்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முதன்மையான முன்னுரிமை என தென் கொரிய பிரதமர் கிம் மின்-சியோக் உத்தரவிட்டுள்ளார்.