காட்டு யானையை எரித்தவரைத் தேடி வலைவீச்சு!

மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் நபர் ஒருவரால் காட்டு யானை ஒன்று எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த காட்டு யானையின் மரணம் தொடர்பான தகவல்கள் இன்று (17) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானையை எரித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரைத் கைது செய்வதற்காக, அநுராதபுர வலய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 50-55 வயதுடைய, 9 அடி உயரமான இந்த ஆண் யானை, ஏற்கனவே இடது முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளாகியிருந்தது. இதற்காகப் பன்டுலகம கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளால் கடந்த 2025.05.14, 2025.06.04 மற்றும் 2025.07.03 ஆகிய திகதிகளில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்ததாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் குறித்த யானை தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், அநுராதபுர வலய அதிகாரிகள் தொடர்ந்து யானையைக் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று (16), தீக்காயங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் உள்ள காணியொன்றில் யானை வீழ்ந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அநுராதபுர வலய அதிகாரிகளால் பன்டுலகம கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது. பின்னர், கால்நடை வைத்தியர் உதேஷிகா மதுவந்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஸ்தலத்திற்கு விரைந்து யானைக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே அது பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.