பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று இடம்பெற்றுள்ளது.
பம்பஹின்ன , வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வந்துள்ளதுடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்தே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து சமனல வேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.