கவின் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் மாஸ்க். வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்து தற்போது தகவல் கிடைத்திருக்கின்றது
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனான கவின் நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் மாஸ்க். வெற்றிமாறன் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் ஒரு சில தினங்களுக்கு முன்பு திரையில் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா ? இல்லையா ? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
தற்போதைய நிலவரப்படி மாஸ்க் திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து ஒரு தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது. அதன்படி மாஸ்க் திரைப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 2 கோடி அளவிலும் இரண்டாம் நாளிலும் கிட்டத்தட்ட இரண்டு கோடி வரையிலும் வசூலித்திருக்கின்றதாம்.