யாழ்ப்பாண பிரதான அங்காடி கடைகள் அமைந்த இடமான கந்தப்பசேகர வீதி, பழைய கரன் தியேட்டர் அருகாமையில் உணவுக்கழிவுகள் போடப்படுவதால் அங்கு துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநகரசபை உறுப்பினர்களான பிரதி மேயர் தயாளன், சாருஜன் மற்றும் சதீஸ் ஆகியோர் குறித்த இடத்திற்கு நேரில் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, உடனடி நடவடிக்கையாக கழிவுகள் அகற்றப்பட்டு, காணி உரிமையாளர்கள் இல்லதாவிடத்து மாநகரசபையால் சுற்றிவர வேலி அமைக்க மாநகரசபை தீர்மானித்துள்ளது. கேமரா மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகரசபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.