களனி – வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.