கல்வி மறுசீரமைப்பின் போது முன் பள்ளியிலேயே தரமான கல்வியை வழங்க வேண்டும்!

கல்வி மறுசீரமைப்பின் போது முன்பள்ளிகளையும் அதன் ஆசிரியர்களை பொறுப்பேற்று பிள்ளைகளுக்கு தரமான அடிப்படை கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ஶ்ரீநேசன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு தேவையானது என்றாலும் இது ஆய்வுகள் செய்யப்படாமல் அவசரமாக செய்யப்படும் போது தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வரலாற்றில் இவ்வாறு தவறுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டம் தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 1971இல் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்ற விடயமும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று 1972இல் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் கல்வி ரீதியில் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையே பாரபட்சமான நிலைமை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் 1981இல் யாழ். நூலகம் எரிக்கப்பட்டமையும் கல்விக்கு விழுந்த அடியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு வரலாற்றை நோக்கும் போது கல்வி பல பக்கச்சார்பான நடைமுறையை பின்பற்றி வந்துள்ளது என்பது தெரிகின்றது.

எனவே கல்வியில் மறுசீரமைப்பை செய்யும் போது சிங்கள மொழியில் கற்பவர்களுக்கும் தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்கும் வகையில் அது அமைந்தால் வரவேற்கத்தக்கது.

உண்மையில் மதம் சம்பந்தமான அடிப்படைவாத சிந்தனை இந்த நாட்டை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்து மதம் தொடர்பான ஆலோசனைகளை பெறுகின்ற போது, அரசியல் சார்ந்தவர்களின் ஆலோசகர்களாக இருந்தவர்கள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைவிடுத்து பல்கலைக்கழகங்களின் சைவ சித்தாந்த சபை, சைவ பரிபாலன சபை, இந்து மாமன்றம் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கக்கூடிய சபைகள் உள்ளன. இவை இதில் உள்ளடக்காமல் இருப்பது குறைபாடாகும்.

கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு தேவையானதே. இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தி, தேசிய ஐக்கியம் உருவாக வேண்டும். சகலருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம்.

எமது கல்வி முன்பள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது. முன்பள்ளி பாடசாலைக்கு அப்பால் இருந்தாலும் அதனை முழுமையாக அரசாங்கம் ஏற்று ஆசிரியர் நியமனம், அவர்களுக்கான பயிற்சி, கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து மேற்பார்வை செய்து மாணவர்களின் விருத்தி தொடர்பில் அவதானிக்க வேண்டும். இதனை வெளியில் விடுவதால் மாணவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்படலாம். இதனால் முன்பள்ளி ஆசிரியர்களையும் அரசு பொறுப்பேற்று தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று பிள்ளைகளுக்கு அறிவு சார்ந்த கல்வியை விருத்தி செய்யவும் வேலைத்திட்டங்களை எடுக்க வேண்டும். இவ்வாறு குறைபாடுகள் இல்லாத நிறைவான மறுசீரமைப்பை செய்யும் போது அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு