கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பு – சஜித்

தரம் 1 தொடக்கம் 6 வரை கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை. கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். கல்வியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை முன்னெடுக்குமாறே வலியுறுத்தி வருகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் மற்றுமொரு கட்டம் இன்று  சனிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டன.

இதன் பிரகாரம், கிதுல்கல பிரதேச வைத்தியசாலைக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் கீழ், CTG Machine 1 ம், Patient Monitor 2 ம், மற்றும் Baby Warmer 1 ம் இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது. கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது.

Green paper, White paper களை முன்வைக்காமல் வெறுமனே power point presentation ஒன்றை மாத்திரம் முன்வைத்து இதனை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

கல்வி சீர்திருத்தப்பட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வந்த சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பினர் எம்மைப் பார்த்து கிண்டலாக சிரித்தனர்.

ஆங்கிலம், சீனம், ஜப்பான் மற்றும் இந்தி மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் எனக்கு கிண்டல் அடித்துப் பேசி, சேறு பூசும் நடவடிக்கைகளைச் செய்தனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கல்வியில் ஆபசத்தை புகுத்துவதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். இந்தப் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்கு பல கட்ட நடவடிக்கைகளைச் செய்யப்பட வேண்டியுள்ளன, ஆனால் இன்று அது எதுவும் முடிக்கப்படவில்லை. ஆகையால் இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

குறைபாடுகள், மீளாய்வுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால், இந்த ஆபாச விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் நலவை நாடவுமே வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகிறோம்.

இதுவரை காலமும் அரச அதிகாரத்துடனே நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் பெறுமானம் சேர்க்கப்பட்டு வந்தன. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாம் நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் பணியை முன்னெடுத்து வருகிறோம். மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகவே இதனைச் செய்து வருகிறோம் என்றார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு