கரைவலை மீனவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், 2010 ஆம் ஆண்டு தொடங்கி, தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் வின்ச் இயந்திரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் கரைவலை மீன்பிடித் தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர்.

மேலும், மீனவர் பிரதிநிதிகள், தாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து கவனத்தை ஈர்த்து, இந்தக் கலந்துரையாடலை வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மீனவர் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் எழுப்பிய அனைத்துப் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, பொருளாதார ரீதியாக யாருடைய வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், ஒவ்வொருவரின் பொருளாதார நிலைமையையும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், பொது மீனவ சமூகம் முன்வைத்துள்ள முறைப்பாடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், இது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற அரச நிறுவனங்கள், கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மீனவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு ஏற்பவும், எதிர்கால சந்ததியினருக்காக கடற்றொழில் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி, அனைத்து தரப்பினரும் இணைந்து குறுகிய காலத்திற்குள் கலந்துரையாடல்கள் மூலம் மிகவும் பொருத்தமான தீர்வுகளை பரிந்துரைக்க இதன்போது ஒப்புக்கொண்டதுடன், போராட்டத்தை கைவிடவும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் அடுத்த திங்கட்கிழமை குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடல்கள் இடம்பெறும் காலத்தில் தற்போது கரைவலை முறையின் கீழ் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் குத்தகை போன்ற கட்டணச் சிக்கல்கள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் மேலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே ஆகியோருடன் கரைவலை மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு