கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் வடபகுதி கம்யூனிஸ்ட் இயக்க முக்கியஸ்தர் எம்.ஏ.சி.இக்பால் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், எம். ஏ. சி. இக்பால், பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் பிரதம பேச்சாளரான சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் “இலங்கை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுயினரையும் காண்கிறீர்கள்.