இந்த மாத இறுதியில் ஒன்பது நாட்கள் சுற்றுப் பயணமாக Malaysia, Singapore மற்றும் South Korea ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் Mark Carney இரண்டு சர்வதேச உச்சிமாநாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
Kuala Lumpur இல் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் Carney கலந்து கொள்ள உள்ளார், அங்கு அவர் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மலேசிய பிரதமரை சந்திக்க உள்ளார்.
அந்த உச்சிமாநாட்டிற்குப் பின்னர் வர்த்தகத் தடைகளை நீக்குவது மற்றும் உலக மூலதனத்தை ஈர்ப்பது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் Singapore பிரதமர் மற்றும் பிராந்திய வணிகத் தலைவர்களையும் சந்திப்பார்.
இறுதியாக South Korea வின் Gyeongju இல் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதாரத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதோடு Carney தனது ஆசிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவார்.
South Korea விற்கான தனது விஜயத்தின் போது, புதிய கனேடிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான இரண்டு ஒப்பந்தகார்களில் ஒரு நிறுவனமான Hanwha Ocean இனால் நிர்வகிக்கப்படும் கப்பல் கட்டும் தளத்தைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத் தக்கது.