கனடா வின்னிபெக் காவல் துறை தலைமையகத்தில் நீர்ப்பெருக்கு!

வின்னிபெக் காவல் துறை தலைமையகத்தில் ஏற்பட்ட பெருமளவான நீர்ப்பெருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் ஒருவர் ஆணும் ஒருபெண்ணும் v(சேதப்படுத்தல்)விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நகர மையத்தில் அமைந்துள்ள 266 கிரேஹாம் அவென்யூ அலுவலகக் கோபுரப் பகுதியில் சனிக்கிழமை மாலை நீர் சொட்டத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இருவர் கோபுரக் கட்டிடத்தின் மேல்தள படிக்கட்டுப் பகுதிகளில் அமைந்திருந்த அவசர நீர் வழங்கல் வால்வுகளைத் திறந்ததன் விளைவாக பெருமளவான நீர்ப்பெருக்கு ஏற்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

“நீர் கீழ்தளங்களுக்கு பெருமளவில் பாய்ந்தது; மேல்சாளரங்களிலிருந்தும் நீர் வழிந்தது. இச்சம்பவம் மிக விரைவாக இடம்பெற்றது,” என காவல் அதிகாரி டானி மெக்கின்னன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். “ அணைக்கட்டுகள் திறக்கப்பட்டது போலவே மேற்படி நிலைமை உருவானது” என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை காவல் துறை அடையாளம் கண்டதாக தெரிவித்தது. கட்டிடத்தைச் சுற்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இரவு 11 மணிக்கு பின்னர் கிரேஹாம் அவென்யூவின் 200-ஆம் தொகுதிப் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

51 வயதுடைய ஒருவரும் 36 வயதுடைய ஒருபெண்ணும் $5,000-ஐ மீறும் அளவிலான சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஆறு “மிஸ்சீஃப்” குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி