மிஸ்ஸிசாகாவில் சாலையைக் கடக்க முயன்றபோது, ஒரு ஆணும் ஒரு இளம் சிறுவனும் தனித்தனியான இரண்டு வாகனங்களால் மோதப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலில் தெற்கு நோக்கிச் சென்ற வெள்ளை செவி எஸ்யூவி (white Chevy SUV) ஒன்று பாதசாரிகள் இருவர் மீதும் மோதியதாகவும், பின்னர் அவர்கள் எதிர்த் திசையில் வடக்கு நோக்கிச் சென்ற வோக்ஸ்வாகன் (Volkswagen) கார் மீது, தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் நம்புகின்றனர்.
வோக்ஸ்வாகன் காருக்கு அடியில் சிக்கியிருந்த 16 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவனை மீட்டெடுத்து அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
60 வயது மதிக்கத்தக்க அந்த நபரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனச் சாரதிகளும் சம்பவ இடத்திலேயே இருந்ததுடன் மற்றும் இந்த விவகாரத்தில் பொலிஸ் புலனாய்வாளர்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.