பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி, தங்களின் சேவையில் பணியாற்றும் பெண்களின் தலைமையேற்பு, சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை கௌரவித்தது.
இந்த ஆண்டின் கருப்பொருளான ‘பகிர்வதன் மூலம் வளர்ச்சி’ என்பதை அடைய உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
எங்கள் அமைப்பிலும் சமூகத்திலும் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் நன்றி. உங்கள் பணிகள் காவல் சேவையின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், ஒன்றிணைந்து மேலும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகின்றன என பீல் பிராந்திய காவல்துறை தனது வாழ்த்தினைப் பதிவிட்டுள்ளது.