டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் எனக் கோரிய இடைக்காலத் தடை மனுவை, எட்மண்டன் நீதிபதி நிராகரித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை கிங்ஸ் பெஞ்ச் நீதிமன்றம் (King’s Bench Court) நீதிபதி டக்ளஸ் மா, இந்த தீர்ப்பு அல்பர்டா ஆசிரியர்கள்(ATA) அமைப்பு முன்வைத்த கோரிக்கைக்கான முடிவாக அல்ல என்று கூறினார். மேலும், இதை அல்பர்டா அரசின் பணிக்கு திரும்பச் செல்லும் (Back to School Act) சட்டத்திற்கு ஆதரவாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் அக்டோபரில் மூன்று வாரங்கள் நீடித்த வேலைநிறுத்தத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், 51,000-க்கும் அதிகமான ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்ததுடன், நான்கு ஆண்டுகள் காலம் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தையும் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக அமல்படுத்தியது. இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது, சட்டத்திற்கு எதிரான நீதிமன்ற சவால்களைத் தடுக்க சாசன உட்பிரிவு இருந்தபோதிலும் அதை அல்பர்டா அரசு பயன்படுத்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இடைக்காலத் தடை வழங்கப்பட வேண்டுமெனில் மூன்று சட்டத் தகுதிகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி மா விளக்கினார்:
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தின் விளைவுகள் மாணவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.