கனடா நாட்டின் மத்திய அரசாங்கம், வெளிப்புற ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சிறப்புச் சேவைகளுக்காக 2024-25 நிதியாண்டில் 19 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளது.
இந்த பாரிய செலவு ஆனது, கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 பில்லியன் டொலர் அதிகம் என அவதானிக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற ஆலோசகர்களின் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாகவும், அரசு செலவுகளைக் குறைப்பதாகவும் பிரதமர் மார்க் கார்னி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு இது முரணாக அமைந்துள்ளதாக, கருதப்படுகின்றது.
கடந்த நிதியாண்டில் தொழில்முறை மற்றும் சிறப்புச் சேவைகளுக்காக அரசாங்கம் செலவழித்த மொத்தத் தொகை 23.1 பில்லியன் டொலர் ஆகும்.
இதில் சுமார் 19.5 பில்லியன் டொலர் வெளிப்புற நிறுவனங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளமை தற்போது அவதானத்திற்கு உள்ளாகியுள்ளது.