கனடா தொடர்பான பலதரப்பட்ட கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வர நிலையில் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதி JD வேன்ஸும் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கனடாவின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் புலம்பெயர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக, கனடாவின் தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது, GDP அல்லது Gross Domestic Product அறிக்கையை காட்டியுள்ளார் வேன்ஸ்.
அதேபோல கனேடிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படாமல் இருப்பதட்கு கரணம் டிரம்ப் அல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் என்று கூறியுள்ளார்.