நீர்கொழும்பு – ஏத்துகல கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது, கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்கரையில் பணியில் இருந்த ஏத்துகல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளான, பொலிஸ் சார்ஜென்ட் சில்வா, பொலிஸ் கான்ஸ்டபிள்களான கோரலகே, ஹேரத் மற்றும் லக்ஷன் ஆகியோர் சிறுவனை மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.
அனர்த்தத்தில் சிக்கிய சிறுவன் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.