கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்துகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கற்பிட்டியில் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கடந்த 06 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் நான்கு ) சந்தேக நபர்கள் ஒரு டிங்கி படகுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் உச்சிமுனை கடற்படை பிரிவினால் இப்பந்திவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கருவலக்குடா கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகொன்று சோதனை செய்யப்பட்டது. இதன் போது, அந்த டிங்கி படகால் எடுத்துச் செல்லப்பட்டு கருவலக்குடா கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினேழு (17) பைகளில் பொதிசெய்யப்பட்டிருந்த நான்காயிரத்து அறுநூற்று ஐந்து (4605) மருந்து மாத்திரைகள், பதினைந்தாயிரத்து அறுநூற்று இருபத்தேழு (15,627) மருத்துவ களிம்புகள், நானூற்று தொண்ணூற்று நான்கு (494) திரவ மருந்து பாட்டில்கள் மற்றும் நான்காயிரத்து இருபது (4020) மருந்து பாக்கெட்டுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி, தோராயடி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த