வென்னப்புவ கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ – கம்மல கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டவர் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டு மாரவில ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
ஜெர்மனியை செர்ந்த 71 வயதான குறித்த வெளிநாட்டவர் இலங்கை பெண்ணை திருணம் செய்து நீர்கொழும்பில் வசித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.