கடலில் நோய்வாய்ப்பட்ட கப்பல் பணியாளர் தரையிறக்கப்பட்டார்!

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒருவர், இலங்கை கடற்படையின் உதவியுடன் அவசரமாக கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை (26) திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் சென்னைக்கு பயணித்த பெனமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான MV IYO-வில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பணியாளர் வயிற்று நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சைக்காக (Medical Evacuation- MEDEVAC) நோயாளியை கரைக்குக் கொண்டு வர கடற்படையினரிடம் உதவி கோரி, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கப்பலில் இருந்து பெறப்பட்ட அறிவிப்பை உடனடியாக ஏற்றுக்கொண்ட கடற்படை, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு கடற்படை கப்பலை மருத்துவக் குழுவுடன் கடல் பகுதிக்கு உடனடியாக அனுப்பி, ஆபத்தானநிலையில் இருந்த நோயாளியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்தது.

அதன்படி, கடற்படைக் கப்பலில் படுகாயமடைந்த பிலிப்பைன்ஸ் நோயாளியைப் பெற்ற பிறகு, அவர் உடனடியாக திருகோணமலை துறைமுகத்திற்கு அடிப்படை முதலுதவி சிகிச்சையுடன் கொண்டு வரப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்க கடற்படை ஆயத்தமாக உள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த