கடற்கரையில் இருந்து மீன் வாடி அகற்றம் ; பாதுகாப்பு திணைக்களம் அதிரடி செயல்

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று (16) உடைத்து அகற்றப்பட்டது.

வரலாற்று உச்சத்தை நோக்கி தங்க விலை ; இன்றைய விலை என்ன தெரியுமா?
வரலாற்று உச்சத்தை நோக்கி தங்க விலை ; இன்றைய விலை என்ன தெரியுமா?
திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் கடந்த மாதம் 23 ஆம் திகதி குறித்த கட்டுமானத்தை அகற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இன்றையதினம் (16) குறித்த மீன்வாடி அகற்றப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டப்படி கரையோர பிரதேசத்தில் இருந்து 300 மீற்றருக்குள் எந்தவிதமான கட்டுமான பணிகளை மேற்கொள்ளுவதாக இருந்தாலும் ஆணையாளர் நாயகத்தினுடைய அனுமதி பெறப்பட வேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறப்படாத கட்டடம் என்ற அடிப்படையில் குறித்த கட்டடத்தின் கட்டிடம் தொடங்குகின்ற நாளில் இருந்து பணிகள் நிறுத்தப்பட்டன.

அதையும் மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட குறித்த கட்டிடத்தை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினுடைய சட்டத்தின் பிரகாரமும் 23.09.2025 அன்று நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரமும் குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்றப்பட்டது.

அத்துடன் இது தொடர்பாக மக்களினால் பல முறைப்பாடுகளும் பிரதேச செயலகம் உட்பட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இலங்கையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்படுகின்ற வேலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் அனுமதியைப் பெற்று கட்டடங்களை அமைக்குமாறும் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குரிய கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தீபராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக குறித்த கட்டட உரிமையாளர் மனோச் தெரிவிக்கையில், 2009இல் இருந்து குறித்த பகுதியில் தற்காலிக கொட்டில் அமைத்து பயன்படுத்தி வந்ததாகவும் 25க்கு மேற்பட்ட படகுகளின் பொருட்களை இங்கு பாதுகாத்து வந்ததாகவும் இதற்கான அனுமதியை வழங்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து திணைக்களங்களுக்கும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பதிலுலோ மாற்று திட்டங்களோ வழங்கப்படாத நிலையில் குறித்த வாடியை இன்று (16) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதானது இதை நம்பி தொழிலில் ஈடுபடுகின்ற 50க்கு மேற்பட்ட குடும்பங்களினது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் தொடர்ந்து தனது தொழிலை இங்கே நடத்துவதற்கு தற்காலிக கொட்டிலாவது அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்