சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ICC), தனது “உறுப்பினர் கடமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாகக்” குறிப்பிட்டு, கனடா கிரிக்கெட் சபையை (Cricket Canada) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த தற்காலிக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், கனடா தேசிய கிரிக்கெட் அணிகள் இந்த இடைநீக்கக் காலப்பகுதியில் ஐசிசி (ICC) நடத்தும் தொடர்களில் பங்கேற்பதற்கான தகுதியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.