யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(18) இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில், அவர் இன்று காலை அந்த வர்த்தக ஸ்தாபனத்தின் களஞ்சியசாலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்ததாக மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.