கடன்களை செலுத்த சலுகைக் காலம் அவசியம்

நாட்டில் சுமார் 11 இலட்சம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர். இவர்கள் 45 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகின்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களிப்பை இவர்கள் நல்குகின்றனர். கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட நான்கு பெரும் துயர் சம்பங்களினால் அவர்களின் தொழில் முயற்சிகள் மற்றும் வியாபாரங்கள் வீழ்ச்சி கண்டன. இதற்கு அவர்கள் காரணமல்லர். அவர்களின் தவறால் இது நடக்கவில்லை.

2022 புள்ளிவிவரங்களின்படி, 263,000 தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சுமார் 150,000 தொழில் முயற்சிகள் வங்குரோத்தடைந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் கடனை மீளச் செலுத்துவதற்கு 2028 வரை சலுகைக் காலம் கிடைத்திருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக காணப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகளுக்கு பராட்டே சட்ட அமுலாக்கத்தில் இருந்து தற்காலிக சலுகையே கிடைத்தன.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் இவர்களினது கடன்கள் மறுசீரமைக்கப்படவில்லை. எனவே, பல கடுமையான பிரச்சினைகளை இந்த நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஆகையால், இவர்களின் பிரச்சினைகளுக்கு பிரயோக ரீதியிலான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சலுகைக் கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரால் இந்தக் கடன்களைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றன. இதனால் இவர்கள் பெரும் கடன் பொறியில் சிக்கிக் கொண்டுள்ளனர். எனவே தெளிவானதொரு சலுகைத் திட்டத்தை முன்னெடுக்குமாறும், இந்தக் கடன் திட்டத்தைப் பெறுவதற்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் நிவாரணங்களை இவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியிலும் நமது வங்கிக் கட்டமைப்பு மிகை இலாபங்களை ஈட்டியிருப்பதால், இந்த இலாபத்தின் நன்மைகளை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சாதாரண இலாபம் ஈட்டியிருக்க வேண்டுமானாலும் இங்கு வங்கிகள் மிகை இலாபங்களை ஈட்டியுள்ளன. அதில் ஒரு பகுதியை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குப் பெற்றுக் கொடுத்து அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகவும் காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.