கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்க பாதாள உலகத்தோடு தொடர்புகொண்டவர்கள்…

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்தக் குற்றச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் விரிவடைந்தன. இதற்குத் தனிப்பட்ட உதாரணங்கள் தேவையில்லை, அரசியல்வாதிகளே இதனை வளர்த்தெடுத்தனர். ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பணம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் பணிகளுக்குப் பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்பட்டமை தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டு தற்போது படிப்படியாக அரசியல் தொடர்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார் இதனைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.”

“போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் ஒரே தரப்பினரே. போதைப்பொருள் கடத்தலின் போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் மற்றும் மோதல்களே இந்தக் கொலைகளுக்குக் காரணமாகின்றன. நாங்கள் இந்தக் கொலைகளை அங்கீகரிக்கவில்லை, அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினரை ‘சிவப்பு அறிவித்தல்’ மூலம் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.”

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் தற்போது முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு