ஓட்டாவா நகர சபையானது (City Council) 7.12 பில்லியன் டொலர் மதிப்பிலான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 21க்கு 4 என்ற வாக்கு வித்தியாசத்தில் அங்கீகரித்துள்ளது.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகே, இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஓட்டாவா குடியிருப்பாளர்களுக்கு, சொத்து வரியில் ஒட்டுமொத்தமாக 3.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிலிருந்து இந்த சொத்து வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.
இந்த வரவு செலவுத் திட்டமானது, பொதுப் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற முக்கியப் பகுதிகளில் முதலீடு செய்யும் என்று ஓட்டாவா மேயர் மார்க் சட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.