சென்னை
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டமானது, ‘ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி’ என அதிமுக எம்.பி. இன்பதுரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காவிரி உரிமையை மீட்கத் திறனில்லை:
இது குறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான பதிவில், “உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வருடா வருடம் தமிழ்நாடு பெற்றுவரும் காவிரி உரிமை நீரை, இந்த ஆண்டு உரிய முறையில் கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத் தரும் திறன் இல்லாதவராக முதலமைச்சர் விஜய் உள்ளார்,” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓடும் நீரில் கோலம்:
தொடர்ந்து அவர், “காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாத முதலமைச்சர் விஜய்யால் தற்போது கூட்டப்பட்டுள்ள இந்தத் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்பது, ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சியாகும்” எனப் பதிவிட்டு தவெக அரசின் நடவடிக்கையை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். எம்.பி. இன்பதுரையின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் அதிமுகவினரால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
#Inbadurai #AIADMK #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #DelimitationBill #TNMPsMeeting #CauveryIssue #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN