ஒரு வருடத்தில் நாட்டின் கடனை செலுத்த என்ன கேள்வி!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டன. கடனைச் செலுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் எடுத்த புதிய கடன்கள் யாவை? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதன்படி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதான கீழ்வரும் கேள்விகளையும் அரசாங்கத்திடம் தொடுத்திருந்ததார்.

கேள்விகள்-

இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்தான நாட்டை அனுபவிக்க வழிவகுத்த விசேட காரணிகளில் ஒன்று தான் மோசமான கடன் முகாமைத்துவமாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டிருந்த சமயம் நாட்டைப் பொறுப்பேற்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி வழிநடத்தும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இதன்பிரகாரம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அதற்கான பொருளாதார தயார்நிலையையும் தெரிந்து கொள்ள பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

1. தற்போது இலங்கையின் ஒட்டு மொத்த கையிருப்புத் தொகை எவ்வளவு? (பரிமாற்றத் தொகையை [SWAP] தனியாகக் குறிப்பிடவும்) கடந்த ஆண்டில் கையிருப்பில் காணப்பட்ட மாதாந்த மாற்றங்கள் யாவை?

2. தற்போது நாட்டின் மொத்த கடன் தொகை எவ்வளவு? அந்தக் கடனில் உள்நாட்டுக் கடன் எவ்வளவு, வெளிநாட்டுக் கடன் எவ்வளவு என்பதைத் தனித்தனியாகக் கூற முடியுமா? இதில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெற்றுள்ள (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) கடன் தொகைகள் யாவை? வெளிநாட்டுக் கடனைப் பொறுத்தவரை, இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிணைமுறி பத்திரதாரர்கள் என தனித்தனியாகத் தகவல்களை வழங்க முடியுமா?

3. இந்த ஆண்டில் கடன் தவணைகள் மற்றும் வட்டியாக செலுத்தப்படும் முழுத் தொகை எவ்வளவு? அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது எவ்வாறு மாறுகிறது என்ற முறையை வருடாந்தம் தனித்தனியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா?

4. அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடனைச் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை தொடர்ந்தும் நிலைபேறானதாக பேணிச் செல்ல அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம் யாது? இந்த இலக்குகளில் எத்தனை விகிதம் இந்த ஆண்டு அடையப்பட்டுள்ளன? அடுத்த 5 ஆண்டுகளில் இது எவ்வாறு செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது?

5. கடனைத் திறம்பட செலுத்த ஆண்டுதோறும் பேணிச் செல்ல வேண்டிய மதிப்பிடப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல் எவ்வளவானதாக அமைந்து காணப்பட வேண்டும்? இதற்காக கடந்த ஆண்டில் அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் யாவை? இந்தத் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக அடைந்து கொள்ளப்பட்ட இலக்குகள் யாவை?

6. கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடாக இவ்வளவு தொகையை இலங்கை பெற்றது? அடுத்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் எதிர்பார்க்கும் அந்நிய நேரடி முதலீடுகளின் (FDI) அளவு யாவை ? எந்தெந்த துறைகளில், எந்த தொகைகளில் இந்த முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றன?

7. SVAT-ஐ இரத்துச் செய்வதாலோ அல்லது தொடர்வதாலோ பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் கணிப்பீடொன்றை (Impact Assessment) அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா ? ஆமெனில், அது தொடர்பான புள்ளிவிவர தரவு அறிக்கைகள் யாவை ? அவற்றை சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்