ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது – நந்திதா ஸ்வேதா

‘அட்டக்கத்தி’ படத்தில் அறிமுகமாகி ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அசுரவதம்’, ‘கபடதாரி’, ‘ரத்தம்’, ‘ரணம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வரும் நந்திதா ஸ்வேதா, தற்போது தமிழ் – தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். புதிய வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நந்திதா ஸ்வேதா தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்தார். அதன் விவரம் இதோ… “நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சிறுவயதில் இருந்தே சினிமா பைத்தியம் என்றுகூட சொல்லலாம். உனது ஆசை என்ன? என்று யார் கேட்டாலும், நடிகை ஆகப் போகிறேன் என்று தயங்காமல் கூறுவேன். நிகழ்ச்சி ஒன்றில் என்னை சந்தித்த இயக்குனர் விஜயகுமார், என்னை அவரது இயக்கத்தில் வெளியான `நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னட படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டேன்.

சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ‘ஹிட்’ அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது. அதுதான் மிகப்பெரிய பொய். ஒரே படத்தில் யாருமே கோடி கோடியாக சம்பாதிக்க முடியாது. படிப்படியாகவே ஒரு நிலையை பிரபலங்கள் அடையமுடியும். சாதனையில் மட்டுமல்ல, சம்பளத்திலும் தான்.

நான் முதல் படம் நடித்துவிட்டு 3 ஆண்டுகள் படிக்க சென்றுவிட்டேன். கல்லூரி முடித்தபிறகு நடித்த படம் தான் `அட்டகத்தி’. நான் நடித்ததிலேயே ‘அட்டகத்தி’ தான் எனக்கு பிடித்த படம். அந்த படம் தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘உள்குத்து’ படங்களில் நடிக்கும்போது பலர் இந்த படங்கள் வேண்டாம் என்றார்கள். மீறி நடித்தேன். அந்த படங்கள் ‘ஹிட்’ அடித்தன. சில படங்கள் நம்பி நடித்தும் கைகொடுக்கவில்லை. வெற்றி, தோல்வி இரண்டுமே இரண்டற கலந்தது தான் சினிமா.

சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான்.வேண்டாம் என்று உதறித் தள்ளிய படங்கள் நிறைய வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான். அதற்காக கவலைப்பட்டு கிடப்பது முட்டாள்தனம். அடுத்தது என்னவென்று போய்க்கிட்டே இருக்கவேண்டும். கவர்ச்சியாக நடிப்பேன், நடிக்கமாட்டேன் என்றெல்லாம் முடிவு எடுத்து வைத்துக்கொள்வது கிடையாது. கதைக்கு தேவைப்பட்டால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார்”. என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த