ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிப் போரில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அது 2764 என்று கூறுவது வேடிக்கை – சாணக்கியன் இராசமாணிக்கம்

2009 இறுதிப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அந்த எண்ணிக்கை 2764 என்று கணக்கு கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சரிடம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கேள்வியெழுப்பி உரையயாற்றும் போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 இறுதிப் போரில் காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான விடயத்தில் தமிழ் மக்களின் கருத்துப்படி ஒரு இலட்சத்து 60ஆயிரம் வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதாகவே உள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கருத்துப்படி அந்த எண்ணிக்கை 60 ஆயிரம், 70ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இலங்கை அரசினால் கூறப்படும் கணக்கு 2764 என்பது வேடிக்கையானதாக இருக்கின்றது.

அத்துடன் செம்மணி அகழ்வு பணிகள் விடயத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஏன் சர்வதேச ரீதியலான ஆய்வுகளுக்கு உட்படுத்தவில்லை. 96, 97 காலத்தில் மீட்கப்பட்டவை ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆய்வு நிறுவனமொன்றில் உள்ளன.

டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தலாம். பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் நீங்கள் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம், நிதி ஒதுக்கீடு பற்றி கூறுகின்ற போதும், கொல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஒரு வார்த்தையும் உங்களின் பதிலில் இல்லை.

ஊழல் மோசடியை இல்லாமல் செய்வதற்காக மட்டும் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும என்றும் நம்பியே வாக்களித்தனர்.

அதேபோன்று இழப்பீட்டு அலுவலகத்தின் 5 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்களே. இதன்படி இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவமே விசாரணை நடத்தி, இழப்பீட்டையும் வழங்கப் போகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி பயன்படுத்தியதாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. அவர்களின் உரிமை அது. அந்த மாணவர்களின் பெற்றோரின் புகைப்படங்களை காட்டி அவர்களின் முகவரி உள்ளிட்ட விடயங்களையும் குறிப்பிட்டு விசாரணைகளை நடத்துகின்றனர்.

2009இல் கொல்லப்பட்டவர்களுக்கும் நீதியில்லை. சர்வதேச ரீதியிலான விசாரணை பொறிமுறைகளுக்கு நீங்கள் இணங்கவும் இல்லை. தமிழ் மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை எப்போதோ கைவிட்டுள்ளனர். ஆனால் நீங்கள் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் இந்த விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

Ir bri

ஈரான் பிரித்தானியாவுக்கு கடும் எச்சரிக்கை

March 20, 2026

அமெரிக்கா, தனது இராணுவ தளங்களை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியிருப்பது தாக்குதலில் நேரடி பங்கேற்பாகவே பார்க்கப்படும் என ஈரானின் வெளிவிவகார

45

வடமராட்சியில் அதிபரின்றி இயங்கும் பாடசாலை

March 20, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் உள்ள யா/ கணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் கடந்த ஐந்து மாதங்களாக அதிபர் நியமிக்கப்படாத நிலைமை

Sarath

2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்!

March 20, 2026

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இந்த வீடுகளை எதிர்வரும் 3

sanakiyan

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிப் போரில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அது 2764 என்று கூறுவது வேடிக்கை – சாணக்கியன் இராசமாணிக்கம்

March 20, 2026

2009 இறுதிப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அந்த எண்ணிக்கை 2764 என்று

min

இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

March 20, 2026

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய

Ali saf

இலங்கைக்கு சடுதியாக வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன?

March 20, 2026

இலங்கைக்கு சடுதியாக வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக நாம்

kid

கொத்தியாபுலையில் கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு;மற்றுமொருவர் சடலமும் கிணற்றுக்குள்…

March 20, 2026

ட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்

Nalinda Jayatissa

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

March 20, 2026

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும்

Bimal PArl

பாராளுமன்றில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அமைச்சர் கருத்து

March 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல்

no

ஹொலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்

March 20, 2026

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார். அவர் காலமான

bima

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான

gaze

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான