பொலன்னறுவை, லங்காபுர பகுதியில் ஒருவரைத் தாக்கி நான்கு பற்களை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லங்காபுர பிரதேச சபை உறுப்பினரை ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க பொலன்னறுவை மேலதிக நீதவான் ஷாலனி குணவர்தன நேற்றுதிங்கட்கிழமை(15) அன்று உத்தரவிட்டார்.
சர்வஜன பலய கட்சியின் ஸ்ரீலங்காபுர பிரதேச சபை உறுப்பினர் முகமது காசிம் அப்துல் சமத் பிணையில் விடுவிக்கப்பட்டவர்.
சந்தேக நபரை ஜனவரி 26 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அல்ஹிலால்புர தம்பல பகுதியைச் சேர்ந்த குப்பத்தம்பி முகமது அஸ்வரைத் தாக்கிய பின்னர் நான்கு பற்கள் உடைந்ததாக சந்தேக நபருக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புலஸ்திபுர பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.