டொரோண்டோ — பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தைச் சுருக்குவதன் மூலம் ஒன்டாரியோவை பாதுகாக்கும் மாகாணத் திட்டத்தின் முக்கியமான கட்டமாக, டொரோண்டோவில் எக்லின்டன் க்ராஸ்டவுன் லைட் ரெயில் டிரான்சிட் (LRT) சேவையின் அதிகாரப்பூர்வத் திறப்பை ஒன்டாரியோ அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய போக்குவரத்து வழித்தடம் நாளை 2026 பிப்ரவரி 8 முதல் டொரோண்டோ டிரான்சிட் கமிஷன் (TTC) நிர்வாகத்தின் கீழ் செயல்படத் தொடங்கும். இது ஒவ்வொரு வாரநாளிலும் 123,000-க்கும் மேற்பட்ட பயணிகளைச் சேவையளித்து, கென்னடி நிலையத்திலிருந்து மவுண்ட் டென்னிஸ் நிலையம் வரை பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் வரை குறைக்கும். சேவை தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், நாளை திறப்பு நாளில் பயணிகளுக்கு இலவச சேவை வழங்கப்படும்.
இது கிழக்கிலிருந்து மேற்குவரை ஆயிரக்கணக்கான மக்களை வேகமான, மலிவான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்துடன் இணைக்கிறது என்று முதல்வர் ஃபோர்ட் தெரிவித்தார்.
கனடிய வரலாற்றில் மிகப்பெரிய கட்டுமானத் திட்டத்தை எங்கள் அரசு முன்னெடுத்து வருகிறது. மாகாணத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க புதிய சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் முதலீடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.
ஒன்டாரியோவை பாதுகாக்கும் அரச திட்டத்தின் ஒரு பகுதியாக பயண நேரத்தைச் சுருக்க போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கஇ மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்திற்காக எமது மாகாணம் சுமார் 70 பில்லியன் டொலலர் வரை முதலீடு செய்து வருகிறதாகவும் முதல்வர் டக் ஃபோர்ட் மேலும் தெரிவித்தார்.