ஒட்டாவா மாநகரக் கவுன்சிலர் மேத்யூ லுலோஃப் (Matthew Luloff) மீதான வழக்கின் விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மேத்யூ லுலோஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், அந்த மனுவை ஒன்டாரியோ நீதிமன்ற நீதிபதி மைக் பாய்ஸ் நிராகரித்தார்.
ஒட்டாவா நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் மற்றும் அறைகள் இல்லாத காரணத்தினால், 2025 ஒக்டோபரில் நடக்க வேண்டிய இந்த விசாரணை தற்போது எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.