ஐயப்ப பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை; மூளையை திண்ணும் அமீபா

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்லவுள்ளனர். இவர்கள் கேரளாவில் மிகவும் எச்சரிக்கையாக சென்று வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி இருமுடி கட்டி வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்கள், ஸ்பாட் முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்கள் என நாள்தோறும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே சென்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் மூளையை திண்ணும் அமீபா பரவி வரும் சூழலில், பலரும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரளாவில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநில அரசு சார்பில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏதாவது உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தாலோ, மருந்துகள் உட்கொண்டு வந்தாலோ, அதுதொடர்பாக ஆவணங்கள் உடன் சபரிமலைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க வருவதற்கு முன்பாக சிறிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

சபரிமலை என்பது அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாம்பு கடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் சபரிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் ஆங்காங்கே முகாமிட்டுள்ளனர். எனவே ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பான பயணத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை உடன் பிரதான நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pana

பிரதேச சபையில் பதற்றம்

November 17, 2025

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின்

chi

தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து

November 17, 2025

தைவானுக்கு எதிராக சீனா பலத்தைப் பயன்படுத்தினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி எச்சரித்து

gaza

அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா?

November 17, 2025

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா

cri

68 வயதுடைய பெண் கொலை: விசாரணை ஆரம்பம்

November 17, 2025

இரத்தினபுரி, நிவிதிகல பகுதியில் 10 ஏக்கர் தனியார் தோட்டத்தில் 68 வயதுடைய பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 2

fo

வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

November 17, 2025

இலங்கையில், செல்லுபடியான சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது தமது நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும்

Death-2

விபத்தில் யாசகர் பலி

November 17, 2025

கல்முனை – மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி,

puth

சர்ச்சைக்குள்ளான புத்தர் சிலை தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்

November 17, 2025

திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

ol

கைவிடப்படும் நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தம்!

November 17, 2025

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை இந்தியாவுடன் கூட்டிணைந்து புதுப்பித்தல் மற்றும் மீளமைத்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை

ve

வெளிநாட்டில் கொல்லப்பட்ட இலங்கையர்; தவிக்கும் மனைவி, பிள்ளைகள்

November 17, 2025

இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின்

arrest

டோனி கைது

November 17, 2025

தெகிவளை, கல்கிஸ்ஸ தொகுதியின் JVP – NPP அமைப்பாளரும் வேட்பாளருமான (குடு/தூள்) போதை கடத்தல் வியாபாரி டோனியை போதைவஸ்து தடுப்பு

Jinthu

இலவச மருத்துவ முகாம்

November 17, 2025

36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று

ga

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கிப் பலி

November 17, 2025

கொழும்பு – காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர்