ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது – சஜித் பெருமிதம்!

நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும், ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 4 தேர்தல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளன. இக்காலப் பிரிவினுள் இந்நாட்டில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பணிகளை ஆற்றி வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கமும், மின்சார சபையும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க மின்சாரக் கட்டணத்தை 6.8% ஆல் அதிகரிக்க முனைந்த போது, அண்மைய நாட்களாக நானும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் நாடு முழுவதும் சென்று மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று கூறி வந்தோம். மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று காலையிலயே நிராகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று (14) கண்டியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் வகிபாகம் என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதல்ல, மாறாக மக்களுக்கான உண்மையான பொறுப்பை நிறைவேற்றுவதாகும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த இந்த முடிவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நியாயமற்ற மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாகவே நிறுத்தப்பட்டது. எதிர்வரும் நாட்களில் இந்த மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கூறியதன் பிரகாரம், ரூ.9000 கட்டணம் ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணம் ரூ.2000 ஆகவும், 33% ஆலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறைக்காத பட்சத்தில், இந்நாட்டு மக்களுடன் சேர்ந்து வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்த சமயம், ​​முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் தெளிவான அதிகாரத்தோடு ஆட்சியில் இருக்கும் இவர்கள் இன்னும் இந்த ஒப்பந்தத்தை மாற்றவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறி விட்டனர்.

இந்நாட்டு மக்கள் இப்போது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலயே வாழ்ந்து வருகின்றனர். இன்று நாட்டின் 50% க்கும் அதிகமானோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். மின்சாரக் கட்டணங்களை அதிகரித்து, சாதாரண மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. டீல் இல்லாத, மக்களைக் காட்டிக் கொடுக்காத, நடைமுறைக்கு ஏற்ற, மக்கள் நலன் சார்ந்த, எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டு மக்களின் மனித மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்