ஏழு பொலிஸ் பிரிவுகளில் குற்றச் செயற்பாடுகள் அதிகம்

கொழும்பு வடக்கு, நுகேகொட, கம்பஹா,எல்பிட்டிய, தங்காலை,காலி மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவுகளிலேயே திட்டமிட்ட குற்ற கும்பல்களின் செயற்பாடுகள் அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, நாட்டில் நடக்கும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கும்பல் வன்முறை அல்லது கும்பல் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கைப் பொலிசில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்பு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும், மாகாண ரீதியாக வெவ்வேறாகவும், கும்பல் வன்முறை தொடர்பாக, இலங்கைப் பொலிசாருக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்ட ஏதேனும் பணிப்புரைகள் உள்ளடங்கலாக அனைத்து மாகாணங்களிலும் சட்டங்களையும் சட்டச் செயன்முறைகளையும் சமச்சீராக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும், கும்பல்வன்முறையால் பாதிக்கப்படக்கூடிய உயர் அபாயநேர்வுடைய ஏதாவது மாவட்டங்களை அல்லது பிரதேசங்களை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதா என்பதையும், அவ்வாறாயின், அத்தகைய மாவட்டங்களில், பிரதேசங்களில் எதிர்காலக் கும்பல் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா? என ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

நாடு முழுவதும் ஒரே வகையில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் பொலிஸ் கட்டளைகள் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் அதிகளவிலான திட்டமிட்ட குற்றம்பல்களின் செயற்பாடுகள் அதிகளவில் தென் மற்றும் மேல் மாகாணங்களிலேயே நடக்கின்றன. இவற்றில் கொழும்பு வடக்கு நுகேகொட,கம்பஹா, எல்பிட்டிய, தங்காலை,காலி மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவுகளிலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகின்றன.

எவ்வாறாயினும் நாடுமுழுவதும் குற்றச்செயல்களை கட்டுபடுத்த புலனாய்வு பிரிவு, பொலிஸ் உளவு பிரிவுகள் செயற்படுகின்றன. விசேட தேடுதல் மற்றும் ரோந்து நடவடிக்கைகளும் நடக்கின்றன. அத்துடன் குற்றவாளிகள் தப்பி செல்ல முடியாதவகையில் விசேட பாதுகாப்பு,கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த